Monday, August 9, 2010

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.
ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.
இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.
இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.
பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.
நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,
சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்
முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.
உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!
இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.
செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.
நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.
நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.
நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.
இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.
நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.
சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.
கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!
ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.
வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.
நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா? பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா? அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.
அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.
பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.
கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.
உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே! மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.
வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.
இறுதியாக...
இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?
இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.
இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...!
இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,
அலைபேசி: (+965) 66 64 14 34
மின்னஞ்சல்: abkaleel@gmail.com / abkaleel1@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.co.in
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
கௌரவ தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
இணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்
ஆசிரியர் குழாம், www.mypno.com / www.k-tic.com
நிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)
வலைப்பூக்கள்: www.khaleel-baaqavee.blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ulamaa-pno.blogspot.com / www.608502.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress.blogspot.com / www.pinnaijaffar.blogspot.com / www.ppettai.blogspot.com / www.ulamaa-chidambaram.blogspot.com / www.aimaan-pno.blogspot.com / www.news-portonovo.blogspot.com / www.mammsm.blogspot.com / www.ismailpno.blogspot.com

Wednesday, August 4, 2010

வாழ்வின் வசந்தமே வருக

வாழ்வின் வசந்தமே வருக

ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்)

இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!

நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்:

1. இந்த ரமலானில் முழு நன்மைகளையும் பரிபூரணமான முறையில் அடைந்து கொள்வதற்க்கு இறைவனிடம் துஆ செய்வது இதை இன்று முதல் துவங்குவது.
2. நமக்கு நாமே ஒரு உறுதி மொழி எடுப்பது ரமலானில் அனைத்துவிதமான பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பேன். (உதாரணமாக: கண், காது, கை, கால்)
3. அதிகமாக நம் ஓய்வு நேரங்களை இறைவழிப்பாட்டில் கழிப்பதற்க்கு முயற்சிப்பது.
4. அத்திவாசியமற்ற வேலைகளை ரமலானுக்கு முன் அல்லது பின் மாற்றிக்கொள்வது. உதாரணமாக ரமலானுக்கா செய்யக்கூடிய ஷாப்பிங் மற்றும் துணி எடுப்பது போன்றவற்றை முன்னமே முடித்து விட்டு இபாதத்துக்காக முழுமையாக நம்மை தயாராக்கிக் கொள்வது.
5. 24 மணி நேரங்களையும் ஸுன்னத்தான வாழ்க்கைக்கு ( நாயகம் ஸல் அவர்களின் முழு ஸூன்னாவைப் பேண) ஒரு வாய்ப்பாக இந்த ரமலானை ஆக்கிக்கொள்வது.
6. நோன்பு சம்மந்தப்பட்ட பிக்ஹ் சட்டங்களை ரமலானுக்கு முன்னே அறிந்து கொள்வது (பேஸ்ட் உபயோகிப்பது, அத்தர் பயன்படுத்துவது, ஊசி போடுவது)
7. ஆபிஸிலும், டிரைவிங்கில் பொதுவாக ஓய்வாக இருக்கும் போது அதிகமாக ஸலவாத் ஒதிக்கொள்வது.
8. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ்வு அல்லது 3 ஜூஸ்வு குர் ஆனில் இருந்து ஓதுவது என்று வழமைப்படுத்திக்கொள்வது. இந்த ரமலானில் ஒன்று / மூன்று குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பதற்ககு முயற்சிப்பது.
9. அதிகமாக நற்பண்புகளை வளர்த்துக்கொளவது, (அதற்க்கு எதிரான கோபத்தை முழுமையாக விடுவது, புறம்பேசுவதை தவிர்ப்பது, பொய்யை தவிர்ப்பது). யார் மீதாவது கோபமாக இருந்தால் இந்த ரமலானில் அவரை மன்னித்து அவரோடு உறவை தொடர்வது.
10. முடிந்த அளவு டிவி பார்பதை தவிர்ப்பது ( நியூஸ் கேட்பதையும் சேர்த்து)
11. இப்தார் மற்றும் ஸஹர் நேரங்களில் ஹலாலான உணவை எடுப்பது ( முடிந்த அளவு நம் சொந்த வருமானத்தில் இருந்து ஆக்குவது) ஹராமான உணவை விட்டு முழுமையாக் தவிர்ந்திருப்பது.
12. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை முழுமையாக ஒரு தடவை இந்த ரமலானில் படித்து முடிப்பது.
13. தொழுகைகளை ஜமாத்தோடும், முன் பின் ஸுன்னத்தோடும் நிறைவேற்றுவது.
14. நபிலான இபாதத்தில் ஈடுபடுவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், ப(F)ர்ளான, வாஜிபான விஷயங்களில் மிக கவனமாக இருப்பது. (குடும்பத்தை கவனிப்பது, ஆபிஸ் வேலைகளில் கவனமாக இருப்பது வாஜிபாகும்.)- ஹஸனி

Saturday, July 3, 2010

பெருநாள் யாருக்கு?

பெருநாள் யாருக்கு?

எவன் உண்ணவும் பருகவும் மாத்திரம் செய்தானோ அவனுக்கு உண்மையான பெருநாளில்லை. (அதாவது) ரமலான் மாதத்தில் நோக்காமலும் நல்ல காரியங்களை செய்யாமலும் இருந்துவிட்டு பெருநாளன்று எவன் அல்லாஹ்வுக்காக நன்மையான காரியங்களைத் தரிகரண சுத்தியுடன் அதாவது மனம்மொழி மெய்களின் சுத்தியுடன் செய்தானோ அவனுக்குதான் உண்மையான பெருநாள்.

புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்வோருக்கு ஈது பெருநாளில்லை (அதாவது வருஷமெல்லாம் அஞ்சிப்பேணாமல் இருந்துவிட்டு, பெருநாளன்று நல்ல வஸ்திரங்களை மட்டும் வாங்கிக் கொள்வது உண்மையான பெருநாளாகமாட்டாது) எனினும் அல்லாஹ{த்தஆலாவால் அச்சமூட்டி அறிவிக்கப்பட்டவைகளை அஞ்சிப்பேணி நடநடதவர்களுக்கே ஈதுப்பெருநாள் உண்டு. (ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காமலும் தௌபா, இஸ்திக்பார் செய்யாமலும் இருந்து விட்டு) பெருநாளன்று மாத்திரம் தன் வீட்டில் (வாசனைக்காக) ஊதுபத்pகளை கொளுத்துபவர்களுக்கு பெருநாளில்லை ஆனால், எவன் தௌபாச் செய்து, அதிலிருந்து பாவம் புரியாமலிருந்தானோ அவனுக்குத்தான் உண்மையான பெருநாள். ஈது (நாளன்று மாத்திரம்) உணவுகளை தயார் செய்து அளிப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால், (அதற்கு முந்திய ரமலான் மாதத்தில்) தன்னாலியன்றவரை நன்மைபுரிய முயன்றவர்களுக்குத்தான் உண்மையான பெருநாளாகும்.

உலக அலங்காரங்களைக் கொன்டு அன்றைய தினம் தங்களை அலங்கரித்து கொள்பவர்களுக்கு ஈதுப்பெருநாள் இல்லை. ஆனால் தக்வாவுள்ளவர்களுக்கே உண்மையான பெருநாள். (பெருநாளன்று ஈதுவுக்குச் செல்ல) வாகனங்களின் மீது ஏறுபவர்களுக்கு உண்மையான ஈதுப் பெருநாளில்லை ஆனால், தங்களுடைய குற்றச் செயல்களை தவிர்ப்பவர்களுக்கே உண்மையான பெருநாளாகும்

பெருநாளன்று ஈதுகாவில் நேர்த்தியான விரிப்புகளை விரித்துக் கொன்டிருப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால் ஸிராத் என்னும் பாலத்தை மறுமையில் கடக்க எவன் முயலுகிறானோ அவனுக்கே உண்மையான பெருநாளாகும்.

Monday, June 21, 2010

உறவினர்களை நேசித்தல்

18.06.2010 வெள்ளிக்கிழ‌மை அன்று துபாய் ப‌ள்ளிக‌ளில் ஜும் ஆ தொழுகையின் போது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ குத்பா உரையின் த‌மிழாக்க‌ம்
த‌மிழாக்க‌ம் :
மௌல‌வி காய‌ல் முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ம்
துபாய்
050 20 19 105

உறவினர்களை நேசித்தல்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் …

ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்

ஜும்ஆ பிறை 6 ரஜப் 1431 ( தேதி: 18- Jun- 2010 )


"உறவினர்களை நேசித்தல்"


முதல் குத்பா

உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !

இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )

"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன்இ கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)

அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).

தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).

அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).


உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும்இ உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)

உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).


நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாகஇ அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால்இ நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள்இ சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள்இ விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள்இ எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)

இரண்டாவது குத்பா

அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இந்த ஐக்கிய அரபு அமீரகம் உங்களுக்கு கட்டளையிடுகிறது. இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாகஇ அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!

தகவல்: அவ்காஃப் - U.A.E.


( மொழியாக்கம்: காய‌ல் சுலைமான் ஆலிம்
இமாம் ETA Ascon & Star Group - Dubai )

Tuesday, January 12, 2010

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்தும் வாராந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்தும் வாராந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி


துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் வாராந்திர‌ இஸ்லாமிய‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 13.01.2010 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் 8.30 ம‌ணிய‌ள‌வில் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌ அர‌சின் ஓய்வு பெற்ற‌ ப‌ள்ளிக் க‌ல்வித்துறை இணை இய‌க்குந‌ர் முதுகுள‌த்தூர் எம்.எஸ். நெய்னா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌மிழ‌க‌ முஸ்லிம்க‌ளின் க‌ல்வி நிலை குறித்த‌ உரையினை நிக‌ழ்த்த‌ உள்ளார்க‌ள்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Sunday, August 30, 2009

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

Tamil Islamic Audio
dateSun, Aug 30, 2009 at 2:17 PM
subjectRe: துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200 வ‌து வார‌ நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ர‌ம‌லான் 7 ( 27 ஆக‌ஸ்ட் 2009 ) வியாழ‌ன் மாலை த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி ( கோட்டை ) ப‌ள்ளியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.


http://www.tamilislamicaudio.com/events_tafseer_200_week.asp?lang=ln1

Tuesday, August 25, 2009

துபாயில் 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு

துபாயில் 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு

http://www.mudukulathur.com/index.asp

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0827-holy-quran-conference-in-dubai.html


துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200 வ‌து வார‌ நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ர‌ம‌லான் 7 ( 27 ஆக‌ஸ்ட் 2009 ) வியாழ‌ன் மாலை த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி ( கோட்டை ) ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

துபாய் செம்பி இன்ட‌ர்நேஷ‌னல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹ‌ம்ம‌து யாசின் த‌லைமை வ‌கிக்கிறார். ச‌ங்கீதா உண‌வ‌க‌ ப‌ங்குதார‌ர் முஹிப்புல் உல‌மா ஏ. முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் வ‌ர‌வேற்புரி நிக‌ழ்த்துகிறார்.

200 வார‌ த‌ஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இய‌க்குந‌ர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை ஈடிஏ அஸ்கான் இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஹ‌மீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.

வேலூர் நாடாளும‌ன்ற இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், அரேபியா டாக்ஸி இய‌க்குந‌ர் பி.எஸ்.எம். ஹ‌பீபுல்லாஹ், பாப‌நாச‌ம் ஆர்.டி.பி. க‌ல்லூரி அர‌பித்துறை பேராசிரிய‌ர் க‌விஞ‌ர் எம். ஷ‌ர‌புத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

ம‌வ்ல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, ஆவூர் தாருஸ்ஸ‌லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ம‌வ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ம‌ன்ப‌யீ உள்ளிட்டோ ஏற்புரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன், அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடுவ‌ர். வின்ன‌ர் குரூப் நிர்வாக‌ இய‌க்குந‌ர் டி.ஏ. அப்துல் க‌பூர் காகா நன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.

மேலும் விப‌ரங்க‌ளுக்கு : 050 - 4255 256

மின்ன‌ஞ்ச‌ல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com