Sunday, August 30, 2009

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

Tamil Islamic Audio
dateSun, Aug 30, 2009 at 2:17 PM
subjectRe: துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் ர‌ம‌லான் தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200 வ‌து வார‌ நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ர‌ம‌லான் 7 ( 27 ஆக‌ஸ்ட் 2009 ) வியாழ‌ன் மாலை த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி ( கோட்டை ) ப‌ள்ளியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.


http://www.tamilislamicaudio.com/events_tafseer_200_week.asp?lang=ln1

Tuesday, August 25, 2009

துபாயில் 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு

துபாயில் 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு

http://www.mudukulathur.com/index.asp

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0827-holy-quran-conference-in-dubai.html


துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13 ஆவ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200 வ‌து வார‌ நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ர‌ம‌லான் 7 ( 27 ஆக‌ஸ்ட் 2009 ) வியாழ‌ன் மாலை த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி ( கோட்டை ) ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

துபாய் செம்பி இன்ட‌ர்நேஷ‌னல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹ‌ம்ம‌து யாசின் த‌லைமை வ‌கிக்கிறார். ச‌ங்கீதா உண‌வ‌க‌ ப‌ங்குதார‌ர் முஹிப்புல் உல‌மா ஏ. முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் வ‌ர‌வேற்புரி நிக‌ழ்த்துகிறார்.

200 வார‌ த‌ஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இய‌க்குந‌ர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை ஈடிஏ அஸ்கான் இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஹ‌மீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.

வேலூர் நாடாளும‌ன்ற இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், அரேபியா டாக்ஸி இய‌க்குந‌ர் பி.எஸ்.எம். ஹ‌பீபுல்லாஹ், பாப‌நாச‌ம் ஆர்.டி.பி. க‌ல்லூரி அர‌பித்துறை பேராசிரிய‌ர் க‌விஞ‌ர் எம். ஷ‌ர‌புத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

ம‌வ்ல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, ஆவூர் தாருஸ்ஸ‌லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ம‌வ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ம‌ன்ப‌யீ உள்ளிட்டோ ஏற்புரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன், அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடுவ‌ர். வின்ன‌ர் குரூப் நிர்வாக‌ இய‌க்குந‌ர் டி.ஏ. அப்துல் க‌பூர் காகா நன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.

மேலும் விப‌ரங்க‌ளுக்கு : 050 - 4255 256

மின்ன‌ஞ்ச‌ல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com

Wednesday, August 12, 2009

துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவ‌ர்க‌ளின் மார்க்க‌ சொற்பொழிவு

துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவ‌ர்க‌ளின் மார்க்க‌ சொற்பொழிவு

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

12.08.2009 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெற்ற‌ சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் செங்கோட்டை சிங்க‌ம், ம‌ணிமொழி ம‌வ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ஃபாஜில் ம‌ன்ப‌ ஈ ஆலிம் அவ‌ர்க‌ள் பேருரை நிக‌ழ்த்தினார்.

அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ண‌வ‌ன் மற்றும் ம‌னைவிக்குரிய‌ க‌டமைக‌ள், குழ‌ந்தை வ‌ள‌ர்ப்பு, ச‌முதாய‌ப் பெண்க‌ள் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌ முறைக‌ள் உள்ளிட்ட‌வை குறித்து விவ‌ரித்தார்.

நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ஜ‌மாஅத்துக‌ளைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ஆர்வ‌முட‌ன் ப‌ங்கேற்ற‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தியும், இர‌வு உணவுக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

நிக‌ழ்ச்சியில் ப‌திவுசெய்ய‌ப்ப‌ட்ட‌ உரை த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் ( www.tamilislamicaudio.com ) த‌ள‌த்தில் வெளியிட‌ப்ப‌டும்.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப், உஃபூர் காக்கா, காய‌ல் சுலைமான் ஆலிம், தாவூத் அலி ஹ‌ஜ்ர‌த், பிலாலி உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர்.

த‌க‌வ‌ல் உத‌வி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

துபாயில் ம‌வ்ல‌வி அப்துஸ் ஸுக்கூர் ஹ‌ஜ்ர‌த் சொற்பொழிவு

துபாயில் ம‌வ்ல‌வி அப்துஸ் ஸுக்கூர் ஹ‌ஜ்ர‌த் சொற்பொழிவு

துபாய் :

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி வார‌ந்தோறும் புத‌ன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

12.08.2009 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெறும் நிக‌ழ்வில் ம‌ணிமொழி மௌலானா, செங்கோட்டை சிங்க‌ம் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் ம‌ன்ப‌ ஈ அவ‌ர்க‌ள் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Saturday, August 8, 2009

துபாயில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ‍ காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை

துபாயில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ‍ காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் 29.07.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

இச்சிற‌ப்பு சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் ம‌வ்ல‌வி காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் காலம் பொன் போன்ற‌து என்பார்க‌ள். ஆனால் நான் அதை ம‌றுத‌லிப்பேன். ஆம். கால‌ம் பொன்னைவிட உய‌ர்ந்த‌து.
பொன்னை இழ‌ந்தால் வாங்கிவிட‌லாம். ஆனால் கால‌த்தை இழ‌ந்தால் திரும்ப‌க்கிடைக்குமா ? என்றார். ப‌ல்வேறு ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் அவை எத‌னால் வீழ்ச்சியுற்ற‌ன‌ என்ப‌த‌னை விரிவாக‌ எடுத்துரைத்தார்.

நிக‌ழ்ச்சியில் நூற்றுக்கண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌வ‌ச‌தியும், இர‌வு உண‌வும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

வாராந்திர‌ நிக‌ழ்ச்சிக‌ளை த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் இணைய‌த்த‌ள‌த்தில் காண‌லாம்.

Saturday, May 16, 2009

துபாயில் அவுலியாக்க‌ளும், சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளும் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாயில் அவுலியாக்க‌ளும், சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளும் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ஷாரே முத்தீனா அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க‌ விள‌க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

13.05.2009 புத‌ன்கிழ‌மை, ஹிஜிரி 1430 ஜ‌மாதுல் அவ்வ‌ல் 18 புத‌ன்கிழ‌மை மாலை நடைபெற்ற சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் ம‌வ்லானா அல் ஹாபிழ் காரி எஸ்.ஏ. முஹ‌ம்ம‌து இப்ராஹீம் அவ்லியா ஆலிம் அவ‌ர்க‌ள் அவுலியாக்க‌ளும், சாதார‌ண ம‌னித‌ர்க‌ளும் எனும் த‌லைப்பில் உரை நிக‌ழ்த்தினார்.

குமரி அபுபக்கர் இறைகீதம் பாடல் பாடினார்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தியும், இர‌வு உண‌வுக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த்து.

Wednesday, April 22, 2009

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்தும் வார‌ந்திர‌ சொற்பொழிவு

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்தும் வார‌ந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை
மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

22.04.2009 புத‌ன்கிழ‌மை மாலை ந‌டைபெறும் நிக‌ழ்ச்சியில் திருச்சி மாவ‌ட்ட‌
அர‌சு ட‌வுண் காஜி முதுகுள‌த்தூர் ம‌வ்ல‌வி க‌. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ
அவ‌ர்க‌ள் 'உண்மையும் ந‌ன்மையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு
நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக்
கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Sunday, April 19, 2009

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி










துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 15.04.2009 புத‌ன்கிழ‌மை இர‌வு அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.

நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ காய‌ல் ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். நிக‌ழ்ச்சியின் ஒருங்கிணைப்பாள‌ர் முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

சீறாப்புராண‌த்திலிருந்து பாட‌ல்க‌ளை கும‌ரி அபுப‌க்க‌ர், தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் ஆகியோர் பாடின‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து அன்புட‌ன் அல்லாவுக்கு நூலாசிரிய‌ர் நாக‌ர்கோவில் க‌விஞ‌ர் ஷாகுல் ஹ‌மீது உரை நிக‌ழ்த்தினார். துஆவுட‌ன் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து. நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதியின‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. நிக‌ழ்ச்சிக்குப் பின்ன‌ர் இர‌வு உண‌வு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Sunday, March 29, 2009

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
தலைமையகம்
எண் 84 அங்கப்பன் தெரு
மண்ணடி
சென்னை 600 001

பேரவையின் கொள்கைக் கோட்பாடுகள்

* இறைத்தூதர்கள் , ஸஹாபா பெருமக்கள், இமாம்கள், இறைநேசர்கள் மற்றும் நபிகளின் குடும்பத்தினர் ஆகியோரை உள்ளன்புடன் கண்ணியப்படுத்தி அவர்களின் வழி நடப்பது

*ஹனஃபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி - இந்நான்கு மத்ஹபுகளையும் சரிநிகர் சமமாக மதிப்பதுடன் நம் இந்தியத் திருநாட்டிலுள்ள ஹனஃபி - ஷாஃபி இவ்விரண்டில் ஏதாவது ஒரு மத்ஹபில் தன்னை ஐக்கியப்படுத்தி அம்மத்ஹப் கூறும் சட்டங்களின்படி வாழ்வது.

*உண்மையான தரீக்காக்களை ஏற்றுக்கொண்டு காமிலான ஷைகிடம் பைஅத் பெற்ரு தெளிவான இறைஞானத்தைப் பெறுவது

*மவ்லித், ஜியாரத், மீலாத், பாத்திஹா, திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அமைந்த உரூஸ் ஆகியவை நன்மை தரும் காரியங்கள் என்று மனமாற ஒப்புக்கொள்வது

*சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் செல்வதுதான் மறுமையில் வெற்றியைக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புவதுடன் இதற்கு முரண்பட்ட இயக்கங்களான வஹ்ஹாபியத், காதியானி, அஹ்லுல் குர் ஆன், ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றை மக்களுக்கு அடையாளம் காட்டி அவற்றின் கொள்கைகள் சரியானவை அல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

*மத - இன - ஜாதி - மொழி வேறுபாடின்றி வாழ்க்கையில் நலிந்த ஏழை எளியவர், அனாதைகள், விதவைகள், நோயாளிகள் , முதியோர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டடோர் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்வது.

*வரதட்சணை, குழந்தைத் தொழிலாளர் முறை, வட்டி மற்றும் போதை போன்ற சமூக சீர்கேடுகளை அகற்றி சமுதாய சீர்திருத்தம் செய்யப் பாடுபடுவது.

Thursday, March 19, 2009

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு







































துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு


http://www.muduvaivision.com/internews.asp?id=263

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் ’மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 18.03.2009 புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு மௌலீது நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலீது நிகழ்ச்சியில் தொண்டி மவ்லானா மவ்லவி முஸ்தபா ஹஜ்ரத், மவ்லவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி உள்ளிட்ட இமாம்கள்,கீழக்கரை, காயல்பட்டணம், தேரிழந்தூர், அதிராம்பட்டிணம், சிவகெங்கை, தோப்புத்துறை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் காயல்பட்டனம் மவ்லவி முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தீனிசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வண்ணம் பாடல் பாடினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.