துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செங்கோட்டை சிங்கம், மணிமொழி மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ஃபாஜில் மன்ப ஈ ஆலிம் அவர்கள் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கணவன் மற்றும் மனைவிக்குரிய கடமைகள், குழந்தை வளர்ப்பு, சமுதாயப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்பட்ட உரை தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் ( www.tamilislamicaudio.com ) தளத்தில் வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உஃபூர் காக்கா, காயல் சுலைமான் ஆலிம், தாவூத் அலி ஹஜ்ரத், பிலாலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் உதவி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
Showing posts with label ஆலிம். Show all posts
Showing posts with label ஆலிம். Show all posts
Wednesday, August 12, 2009
Subscribe to:
Posts (Atom)
