Saturday, August 8, 2009

துபாயில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ‍ காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை

துபாயில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ‍ காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் 29.07.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

இச்சிற‌ப்பு சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் ம‌வ்ல‌வி காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக்க‌வி உரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் காலம் பொன் போன்ற‌து என்பார்க‌ள். ஆனால் நான் அதை ம‌றுத‌லிப்பேன். ஆம். கால‌ம் பொன்னைவிட உய‌ர்ந்த‌து.
பொன்னை இழ‌ந்தால் வாங்கிவிட‌லாம். ஆனால் கால‌த்தை இழ‌ந்தால் திரும்ப‌க்கிடைக்குமா ? என்றார். ப‌ல்வேறு ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் அவை எத‌னால் வீழ்ச்சியுற்ற‌ன‌ என்ப‌த‌னை விரிவாக‌ எடுத்துரைத்தார்.

நிக‌ழ்ச்சியில் நூற்றுக்கண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌வ‌ச‌தியும், இர‌வு உண‌வும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

வாராந்திர‌ நிக‌ழ்ச்சிக‌ளை த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் இணைய‌த்த‌ள‌த்தில் காண‌லாம்.

No comments: