Sunday, March 29, 2009

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
தலைமையகம்
எண் 84 அங்கப்பன் தெரு
மண்ணடி
சென்னை 600 001

பேரவையின் கொள்கைக் கோட்பாடுகள்

* இறைத்தூதர்கள் , ஸஹாபா பெருமக்கள், இமாம்கள், இறைநேசர்கள் மற்றும் நபிகளின் குடும்பத்தினர் ஆகியோரை உள்ளன்புடன் கண்ணியப்படுத்தி அவர்களின் வழி நடப்பது

*ஹனஃபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி - இந்நான்கு மத்ஹபுகளையும் சரிநிகர் சமமாக மதிப்பதுடன் நம் இந்தியத் திருநாட்டிலுள்ள ஹனஃபி - ஷாஃபி இவ்விரண்டில் ஏதாவது ஒரு மத்ஹபில் தன்னை ஐக்கியப்படுத்தி அம்மத்ஹப் கூறும் சட்டங்களின்படி வாழ்வது.

*உண்மையான தரீக்காக்களை ஏற்றுக்கொண்டு காமிலான ஷைகிடம் பைஅத் பெற்ரு தெளிவான இறைஞானத்தைப் பெறுவது

*மவ்லித், ஜியாரத், மீலாத், பாத்திஹா, திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அமைந்த உரூஸ் ஆகியவை நன்மை தரும் காரியங்கள் என்று மனமாற ஒப்புக்கொள்வது

*சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் செல்வதுதான் மறுமையில் வெற்றியைக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புவதுடன் இதற்கு முரண்பட்ட இயக்கங்களான வஹ்ஹாபியத், காதியானி, அஹ்லுல் குர் ஆன், ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றை மக்களுக்கு அடையாளம் காட்டி அவற்றின் கொள்கைகள் சரியானவை அல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

*மத - இன - ஜாதி - மொழி வேறுபாடின்றி வாழ்க்கையில் நலிந்த ஏழை எளியவர், அனாதைகள், விதவைகள், நோயாளிகள் , முதியோர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டடோர் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்வது.

*வரதட்சணை, குழந்தைத் தொழிலாளர் முறை, வட்டி மற்றும் போதை போன்ற சமூக சீர்கேடுகளை அகற்றி சமுதாய சீர்திருத்தம் செய்யப் பாடுபடுவது.

No comments: