Saturday, July 3, 2010

பெருநாள் யாருக்கு?

பெருநாள் யாருக்கு?

எவன் உண்ணவும் பருகவும் மாத்திரம் செய்தானோ அவனுக்கு உண்மையான பெருநாளில்லை. (அதாவது) ரமலான் மாதத்தில் நோக்காமலும் நல்ல காரியங்களை செய்யாமலும் இருந்துவிட்டு பெருநாளன்று எவன் அல்லாஹ்வுக்காக நன்மையான காரியங்களைத் தரிகரண சுத்தியுடன் அதாவது மனம்மொழி மெய்களின் சுத்தியுடன் செய்தானோ அவனுக்குதான் உண்மையான பெருநாள்.

புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்வோருக்கு ஈது பெருநாளில்லை (அதாவது வருஷமெல்லாம் அஞ்சிப்பேணாமல் இருந்துவிட்டு, பெருநாளன்று நல்ல வஸ்திரங்களை மட்டும் வாங்கிக் கொள்வது உண்மையான பெருநாளாகமாட்டாது) எனினும் அல்லாஹ{த்தஆலாவால் அச்சமூட்டி அறிவிக்கப்பட்டவைகளை அஞ்சிப்பேணி நடநடதவர்களுக்கே ஈதுப்பெருநாள் உண்டு. (ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காமலும் தௌபா, இஸ்திக்பார் செய்யாமலும் இருந்து விட்டு) பெருநாளன்று மாத்திரம் தன் வீட்டில் (வாசனைக்காக) ஊதுபத்pகளை கொளுத்துபவர்களுக்கு பெருநாளில்லை ஆனால், எவன் தௌபாச் செய்து, அதிலிருந்து பாவம் புரியாமலிருந்தானோ அவனுக்குத்தான் உண்மையான பெருநாள். ஈது (நாளன்று மாத்திரம்) உணவுகளை தயார் செய்து அளிப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால், (அதற்கு முந்திய ரமலான் மாதத்தில்) தன்னாலியன்றவரை நன்மைபுரிய முயன்றவர்களுக்குத்தான் உண்மையான பெருநாளாகும்.

உலக அலங்காரங்களைக் கொன்டு அன்றைய தினம் தங்களை அலங்கரித்து கொள்பவர்களுக்கு ஈதுப்பெருநாள் இல்லை. ஆனால் தக்வாவுள்ளவர்களுக்கே உண்மையான பெருநாள். (பெருநாளன்று ஈதுவுக்குச் செல்ல) வாகனங்களின் மீது ஏறுபவர்களுக்கு உண்மையான ஈதுப் பெருநாளில்லை ஆனால், தங்களுடைய குற்றச் செயல்களை தவிர்ப்பவர்களுக்கே உண்மையான பெருநாளாகும்

பெருநாளன்று ஈதுகாவில் நேர்த்தியான விரிப்புகளை விரித்துக் கொன்டிருப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால் ஸிராத் என்னும் பாலத்தை மறுமையில் கடக்க எவன் முயலுகிறானோ அவனுக்கே உண்மையான பெருநாளாகும்.

No comments: